அபுதாபியில் பொருளாதார மேம்பாட்டுத்துறை தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துறை தலைவர் முகம்மது அலி அல் ஷொரப அல் ஹம்மாதி மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை (Golden Visa) வழங்கினார்.
தங்களை ஊக்குவித்து வளர்த்த கேரள மக்களுக்கு இந்த மரியாதை போய் சேரும் என்று நடிகர் மம்மூட்டி கூறினார்.
யுஏஇ அரசிடமிருந்து கோல்டன் விசாவினை பெற்றது மலையாள சினிமாவுக்கான அங்கீகாரம் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.
தொழிலதிபர்கள், திறன் படைத்த நபர்கள், பிரமுகர்கள், மற்றும் வணிகத் தலைவர்கள் ஆகியோருக்கு அவர்கள் துறைகளில் சிறந்து விளங்கியமைக்காக கோல்டன் விசாவானது வழங்கப்படுகிறது.
இதற்கு முன்பு ஹிந்தி திரைத்துறையைச் சார்ந்த நடிகர் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் (Sanjay Dutt)ஆகியோர் கோல்டன் விசாக்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.