சென்னை: கொரோனா தொற்றிலிருந்து  உலக நாடுகள் 2022 இறுதிக்குள் விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக,  உலக சுகாதார அமைப்பின் தலைமை  விஞ்ஞானி  மருத்துவர் சவும்யா சுவாமிநாதன் தெரிவித்து உள்ளார்.
2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா என்னும் கொடிய தொற்று  இரண்டு ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும் முற்றிலுமாக அகற்ற முடியாத சூழல் நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பில் இருந்து தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும், உருமாறிய நிலையில் தொற்று மீண்டும் மீண்டும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அக்டோபரின் 3வது பரவ வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியளார்களிம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌம்யா சுவாமிநாதன், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா தொற்று தற்போது சற்றே தணிந்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொற்று பரவியது போன்ற நிலை இப்போது இல்லை. மெதுவாகவே பரவி வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன அதனுடன்  வாழத் தொடங்கிவிட்டனர். இருந்தாலும் தொற்றின் முதல் மற்றும் 2-வது அலையில் பாதிக்கப்படாதவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் 3வது அலையில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் இந்த பெருந்தொற்று பரவலை தடுக்க   அடுத்த ஆண்டு (2022)  இறுதிக்குள் உலகில் சுமார் 70 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். அதனால் அதன் தாக்கம் குறைந்து விடும்.  அதன்பிறகு உலக நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது.
கொரோனா 3வது அலையில்  சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுவது குறித்து கவலைப்பட வேண்டாம் என்றவர், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதே நேரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதற்கு ஓணம் பண்டிகையும் ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்தடுத்த வாரங்களில் என்ன நடக்கிறது என்று காத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு சவுமியா சுவாமிநாதன்  கூறினார்.