டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா பாதிப்பும் , 648 பேர் உயிரிழந்தும், 34, 169 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தும் உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களாக தொடர்ந்து நேற்று சுமார் 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு 37ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37, 593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3,25,12,366 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 648 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 758 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 34,169- பேர் குணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,35,758 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரத்து 327- ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 59,55,04,593 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 61,90,930 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.