மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,643 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,383 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,28,294 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 105 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,36,067 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 6,795 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,38,794 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,924 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 13,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 38,27,628 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 90 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,584 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 21,942 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,53,008 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,54,563 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.