சென்னை
நடிகை மீரா மிதுனுக்கு வன்கொடுமை தடை சட்ட வழக்கில் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
பட்டியலின மக்கள் குறித்த அவதூறு கருத்துக்களை நடிகை மீரா மிதுன் ஒரு யூடியூப் வீடியோவில் தெரிவித்திருந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மற்றும் அவருடைய ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க்கபப்ட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்..
இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர், “நடிகை மீரா மிதின் பேசியது சமுதாயத்தில் பதற்றத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது,. மீரா மிதுன் இவ்வாறு பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். புலன் விசாரணை தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த வாதங்களைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனவே நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ள நீதிமன்றம் இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.