சென்னை: பட்டியலித்தவர் குறித்து அவதூறு பேசி வீடியோ வெளியிட்ட  நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான ஜாமீன் வழக்கு  ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான புகாரில், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்மீது  7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளள்ளார்.

இநத் நிலையில், தனக்கும், தனது  நண்பர் சாம் அபிஷேக்குக்கும்  ஜாமீன் வழங்க கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவில,   தன்னைப் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின சமுதாயம் பற்றி பேசிவிட்டதாகவும் தான் பேசியது தவறு என தெரிந்ததும், தவறு என குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளதுடன், ஏற்கனவே பல படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், சிறையில் அடைத்துள்ள தால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண் டம் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும்,  விசிக துணைப் பொது செயலாளர் வன்னியரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய, கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.