சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, மறைந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, மதுரை ஆதீனம் மறைந்த முன்னாள் எஎம்எல்ஏக்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் ஆகஸ்டு 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் தமிழக நிதிநிலை அறிக்கை2021-22 தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து 14ந்தேதி முதன்முறையாக விவசாயத்துக்கு என தனி வேளாண்ட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒத்தி வைக்கப்பட்ட கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.
இன்றைய தொடரில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பெரியாரிய சிந்தனையாளர் ஆனைமுத்து, மருத்துவர் காமேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி, தமிழறிஞர் அய்யா இளங்குமரனார் மதுரை ஆதீனம், ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒன்பது முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அவர்கள் விவரம் வருமாறு:
- ஆ. தங்கராசு
- க.ந. இராமச்சந்திரன்
- கே. பண்ணை சேதுராம்
- புலவர் பூ.ம. செங்குட்டுவன்
- கி. அய்யாறு வாண்டையார்
- ம. விஜயசாரதி
- நன்னிலம் அ. கலையரசன்
- இ. மதுசூதனன்
- திண்டிவனம் கே. இராமமூர்த்தி
மேலும் சமூகப் பணியாற்றி மறைந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
தொடர்ந்து பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 4 நாட்கள் நடக்கும் விவாதத்தின் கடைசி நாளான 19-ம் தேதி நிதியமைச்சர், வேளாண் அமைச்சர்கள் பதிலுரையாற்றுவர்.