சென்னை:
24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும், காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல் துரையின் தேடி வந்தனர்.
தலைமறைவாகத் திருவனந்தபுரத்தில் மறைந்திருந்த மீரா மிதுனை காவல்துறை வளைத்துப்பிடித்து கைது செய்த போது அவர் கத்தி, கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அதையும் காணொளி எடுத்துப் பதிவிட்டார். இதற்கெல்லாம் மசியாத காவல்துறை அவரை கைது செய்து ஆலப்புழா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் அழைத்து வந்தனர். அப்போது, 24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல… போலிஸ் அராஜகம் -மீரா மிதுன் மீண்டும் கூச்சல் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் அவருக்குச் சுலபமாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel