புதுடெல்லி:
விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி ரமணா, பாராளுமன்றத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். பாராளுமன்றத்தின் இரு அவைகளும் “வழக்கறிஞர்களால் நிரம்பிய” முந்தைய காலங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், தற்போதைய நிலைமையை “வருந்தத்தக்க நிலை” என்று குறிப்பிட்டார்.
“நமது சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்த்தால், அவர்களில் பலர் சட்டம் தெரிந்தவர்களும் இருந்தனர். மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் உறுப்பினர்கள் வழக்கறிஞர்களால் நிரம்பி இருந்தது என்று தெரிவித்தார்.
“நீங்கள் இப்போது பாராளுமன்ற அவைகளில் பார்ப்பது துரதிருஷ்டவசமானது … அப்போது அவைகளில் நடந்த விவாதங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தன. நிதி மசோதாக்கள் மற்றும் மிகவும் ஆக்கபூர்வமானபுள்ளி விபரங்கள் பற்றிய விவாதங்களை நான் பார்த்துள்ளேன். சட்டங்கள் விவாதிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel