டெல்லி: பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை விதிகளை மீறி, பதிவிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் டிவிட்டர் சமூக வலைதளம் முடக்கப்பட்டது. சுமார் ஒருவார முடக்கத்துக்கு பிறகு தற்போது, ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

டெல்லியில் 9 வயதான தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.அது தொடர்பாக அந்த குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து பேசிய ராகுல்காந்தி, அதுதொடர்பாக புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். இது விதியை மீறிய செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகாரின்பேரில்  காங்கிரஸ் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமூக வலைத்தளமான டிவிட்டர் சமூக வலைதளம் முடக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கு உள்பட பல மூத்த தலைவர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டன.

சுமார் ஒரு வார கால முடக்கத்திற்கு பிறகு, தற்போது ராகுல்காந்தியின் டிவிட்டர் கணக்கு செயல்படத் தொடங்கி உள்ளது. இதை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் சமூக ஊடகத் துறையின் தலைவர் ரோஹன் குப்தா, “இன்று காலை ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் உடன் இணைக்கப்பட்ட அனைத்து கணக்குகளையும் oவிட்டர் திறந்தது. இது இந்திய மக்களின் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனம் நடுநிலையானது அல்ல – இது ஆபத்தான விளையாட்டு! ராகுல்காந்தி எச்சரிக்கை