சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேர்களுக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

1970ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியின் ஆட்சிக்காலத்தின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது.  அதன்படி, அர்ச்சகராக விருப்பம் உள்ளவர்கள் அதற்கான பயிற்சி முடித்து, அர்ச்சராகலாம் என அறிவிக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த வழக்கில், இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து, அர்ச்சகர் பயிற்சிக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு ஏராளமானோருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இடையில் அதிமுக ஆட்சி காலத்தின்போது இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திமுக ஆட்சி மலர்ந்தவுடன் மீண்டும் இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது, அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில்,  அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின்படி பணி நியமனங்கள் செயல்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.  தொடக்கவிழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 58 பேருக்கு அர்ச்சகர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 158 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இவர்கள் 158 கோயில் பணியார்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.