காபூல்:
பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக நிற்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் அரசு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் திரும்பப்பெறப்படும் நிலையில், தாலிபான்கள் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு, அவர்களைக் கட்டுப்படுத்த ராணுவ வீரர்களைப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் கடந்த 2 வாரங்களில் பொதுமக்களில் 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 31 குழந்தைகள், 24 பெண்கள் உள்பட 260 பேர் காயமடைந்து உள்ளனர் எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தாலிபான்கள் கடந்த சில நாட்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் 34 மாகாண தலைநகரங்களில் 17 ஐ கைப்பற்றியுள்ளன, இதில் அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நகரங்களான ஹெராட் மற்றும் கந்தகார் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.