சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் துறைவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் இந்த இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, பல திட்டங்கள் குறித்த தகவல்கள் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்தது முழு விவரம் இதோ…
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
சீர்முக்கு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு.
மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உறுதி செய்ய ரூ.20 ஆயிரம் கோடி.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன் மேம்பாட்டுக்கு ரூ.1149.79 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த மொத்தம் ரூ.6607.17 கோடி ஒதுக்கீடு.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு.
முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு 959.20 கோடி ஒதுக்கீடு.
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ.1,360 கோடி ஒதுக்கீடு.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு.
விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி செல்ல சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
கொரோனா நிவாரண தொகுப்பு ரூ.9,370.11 கோடி ஒதுக்கீடு.
கலைஞர் பெயரில் நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு.
25 கலை கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கு 10 கோடி ஒதுக்கீடு.
பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு.
சுற்றுலா துறைக்கு 187.59கோடி ஒதுக்கீடு. 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.
ஜல் ஜீவன் இயக்கம் மூலம் கிராமப்புறங்களில் 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி நிதி ஒதுக்கீடு.
மத்திய அரசின் தூய்மை பாரத இந்தியா திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
நெடுஞ்சாலைகள் துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு.
2021 – 22 ஆம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த ரூ.111.24 கோடி ஒதுக்கீடு.
1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு.
மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம் மற்றும் மின் துறை இழப்புகளுக்காக ரூ.9,872.77 கோடி ஒதுக்கீடு.
வீடுகளுக்கான அரசு மானியம் ரூ.2.76 லட்சமாக உயர்வு.
தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்க ரூ.433 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1200 கோடி மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.
பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைப்பு.
ஒருங்கிணைந்த குழைந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.2,356 கோடி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்கான ரூ.225.62 நிதி ஒதுக்கீடு.
கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கான இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு.
திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு.
இந்த ஆண்டு 100 திருக்கோவில்களில், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்க 100 கோடி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.