சென்னை: நிலங்களுக்கான வில்லங்கச் சான்றிதலை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக காகிதமில்லா முறையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, முதன்முறை யாக பல்வேறு அறிவிப்புகளும் கடனின் மூழ்கி தவிக்கும் தமிழக அரசை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், தமிழகத்தின் நிதிநிலை சிக்கலை சரிசெய்ய மூன்று ஆண்டுகள் ஆகும் என கூறிய நிலையிலும், பெட்ரோல் விலை குறைப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளார்.
மேலும், நிலங்களுக்கான வில்லங்ச் சான்றிதலை 1975ம் ஆண்டு வரை இணையம் மூலம் சரிபார்க்கலாம் என்ற வசதியை 1950ம் ஆண்டு வரை சரிபார்க்கலாம் என விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துஉள்ளார்.
அத்துடன், மோசடி/போலி பதிவு ஆவணத்தால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க, பதிவுச் சட்டம், 1908 திருத்தம் செய்யப்படுவதால், அத்தகைய பதிவை ரத்து செய்ய பதிவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
பட்ஜெட்டில், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.60 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் ரூ.4500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1000 கோடியில் அறைகலன்கள், சர்வதேச பூங்கா அமைக்கப்படும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.
அடுத்த 5ஆண்டுகளில் 45000 ஏக்கர் நல வங்கித்தொகுப்புகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.