சென்னை: செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று தமிழ்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னையில் நூலகர் சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறந்த நூலகர்களுக்கு விருதுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். நிகழ்ச்சிய பேசியபோது அவர் கூறியதாவது, “மாவட்ட நூலகங்களின் தேவைகள், அதன் கட்டிடங்களின் நிலை, புதிய கட்டிடங்கள் தேவைப்படுகிறதா, இருக்கும் புத்தகங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்கிற ஆய்வறிக்கையை அதிகாரிகள் தந்துள்ளனர். அதை ஆய்வு செய்து, நூலகங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து திட்டமிட்டு வருகிறோம்.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால், தமிழக சுகாதாரத்துறை படிப்படியாக பள்ளிகளை திறக்கலாம் என்று கூறியுள்ளது. அதனால், செப்டம்பரில் பள்ளிகளை திறக்கலாமா என்பத குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை செப்டம்பர் 1ந்தேதி அனைவருக்கும் பள்ளிகள் திறந்தால், 50% மாணவர்களைக்கொண்டு சுழற்றி முறையில் கல்வி கற்பிக்கப்படும். அதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில், து நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிற்து., ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பாடம் என்ற வகையில் அளிக்கப்பட்டு வருகின்றன. ஜேஇஇக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் மூலம் மாணவர்களின் சந்தேகங்களும் தீர்க்கப்படுகின்றன.
நீட் தேர்வு விலக்கு என்ற கொள்கையில் திமுக அரசு நிலையாக உள்ளது. அதனால்தான், ஏ.கே.ராஜன் கமிட்டி உள்ளிட்ட சட்ட போராட்டங்களைத் நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.