மும்பை
இன்று மகாராஷ்டிராவில் 5,560 மற்றும் கேரளா மாநிலத்தில் 23,500 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 63,69,002 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 163 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,34,364 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 6,944 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 61,66,620 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 64,570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
கேரளா மாநிலத்தில் இன்று 23,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 36,10,193 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 116 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,120 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 19,411 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,15,595 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,75,958 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.