டில்லி

ந்தியாவில் நேற்று 36,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,33,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,309 அதிகரித்து மொத்தம் 3,20,33,333 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 468 அதிகரித்து மொத்தம் 4,29,183 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 37,237 பேர் குணமாகி  இதுவரை 3,13,10,624 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,80,895 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,609 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,63,442 ஆகி உள்ளது  நேற்று 137 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,34,201 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,720 பேர் குணமடைந்து மொத்தம் 61,59,676 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 66,123 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 21,119 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,86,693 ஆகி உள்ளது.  இதில் நேற்று 152 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,004 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 18,493 பேர் குணமடைந்து மொத்தம் 33,96,184 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,71,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,338 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,21,049 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,848 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,947 பேர் குணமடைந்து மொத்தம் 28,61,499 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,676 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,893 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,78,130 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,367 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,930 பேர் குணமடைந்து மொத்தம் 25,24,400 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,461 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,85,182 ஆகி உள்ளது.  நேற்று 15 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,564 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,113 பேர் குணமடைந்து மொத்தம் 19,52,736 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,882 பேர் சிகிச்சையில் உள்ளனர்.