
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா.
பின்பு தெலுங்கிலும் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு தீவிரமாக உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.
ஆகஸ்ட் 26-ம் தேதி வித்யூலேகாவுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு இவர் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இருவருமே 2019-ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளனர். இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவருடைய தோழிகள் அனைவரும் இணைந்து பிரைடல் ஷவர் விழாவை நடத்தியுள்ளனர். வித்யுலேகா ராமனின் பேச்சிலர் பார்ட்டி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் கீதாஞ்சலி செல்வராகன்.
