
டாக்டர் படத்தை முடித்த சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து வருகிறார். டான் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை அருகே முன் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதற்காக 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]