சென்னை: தமிழ்க அரசுக்கு வரவேண்டிய வருவாய் குறைந்துள்ளது என்றும், மத்தியஅரசு, தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தராமல் இழுத்தடிக்கிறது என்றும் நிதியமைச்சர் தியாகராஜன் கூறினார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே தெரிவித்தபடி அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய 120 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியின் நிதி சீர்கேடு குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தினர் தலையிலும் ரூ.2,63,976 கடன் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்றும் கூறினார். 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது.
மாநிலத்துக்கு வரி, வரியில்லா வருவாய், அரசின் வரிப்பங்கீடு, திட்ட மானியம் போன்ற வழிகளில் வருவாய் வருகிறது. ஆனால், கடந்த ஆட்சியில், மாநில அரசுக்கு வர வேண்டியவ வருவாய் 4ல் ஒரு பங்கு குறைந்து விட்டது, இதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு போன்றவைகள் குறிப்பிட்டு காட்டியுள்ளது.
மின்துறை, போக்குவரத்துத்துறை மீதான கடன் சுமை அபாயகரமான சூழலில் உள்ளதாகவும், ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனலில் சிக்கி தவிக்கிறது.
திமுக ஆட்சியின்போது 13.89% ஆக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் 4.65 சதவிகிதமாக குறைந்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
மேலும் வருமானம் குறைவுக்கு காரணம் என்ன என்பதை விளக்கிய அமைச்சர்,
பெட்ரோல் மீதான வரி வருவாய் (லிட்டருக்கு) ரூ.21.46ல் ரூ.9.46 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ரூ.33ல் ஒரு ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் வருவாய் பெரிதும் பாதித்துள்ளது.
ஆயிரம் லிட்டர் நீரை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய ரூ.20.81 செலவு ஆகிறது. ஆனால், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம், ரூ.10.42க்கு மட்டுமே வசூலிக்கிறது.
மின்கட்டணம் உயர்த்தாமை, தனியாரிடம் அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்ததால், மாநில அரசுக்கு ரூ.1கோடி 34லட்சம் கோடி கடன் உள்ளதாகவும்,
மின்கட்டணம், குடிநீர் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய பாக்கி மட்டுமே ரூ.1,743 கோடி.
மாநில அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஒடினாலே, ரூ.59.57 பைசா நஷ்டம் ஏற்படுகிறது என வருமான இழப்புகள் குறித்து செய்தியளார்களிடம் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசுக்கு மத்தியஅரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.20.033 கோடி பாக்கி உள்ளதாகவும், அதை விடுவிக்க வேண்டும் என்றும் மத்தியஅரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக நிதிநிலை குறித்த வெள்ளையை அறிக்கையை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…
http://www.tnbudget.tn.gov.in/index.html