சென்னை: தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு எவ்வாறு அதிகரித்து வந்துள்ளது என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆண்டு வாரியாக தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த அதிமுக 10ஆண்டு கால ஆட்சியின் நிதி மற்றும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து இன்று வெளியிட்ட 120 பக்க வெள்ளை அறிக்கையில் தோலூரித்து காட்டியுள்ளனார்.
அதிமுக அட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு எப்படி இருந்தது, தமிழகத்துக்கு வரவேண்டிய வருவாய் குறைந்தது ஏன், 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது ஏன் என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
2011-16ம் ஆண்டு காலக்கட்டத்தில், அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரம் கோடியாகவும், 2016-21ல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என கூறிய அமைச்சர், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக அளவில் உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்ட 3 லட்சம் கோடி பொதுக்கடனில் 50% மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடுகையில் பொதுக்கடன் 26.69 சதவீதமாக உள்ளது. இதுபோன்று 2021 – 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது என்றும் மாநிலத்தில் வளர்ச்சி 11.46% லிருந்து 4.4% ஆக சரிந்துவிட்டது என்பதையும் தெரிவித்துள்ளார்.
கடன் சுமை அதிகரித்து வந்த பாதை – ஆண்டுவாரியாக விவரம்.
1999-2000 – 18,989 கோடி
2000-2001 – 28,685 கோடி
2001-2002 – 34,540 கோடி
2005-2006 – 50,625 கோடி
2011-2012 – 1,03,999 கோடி
2015-2016 – 2,11,483 கோடி
2017-2018 – 3,14,366 கோடி
2020-2021 – 4,56,660 கோடி
2021 – 4,85,502 கோடி