டோக்கியோ: ஜப்பான் தலைநகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய அணி தோற்றாலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஆண்கள் தடகளம் 4X400 மீ ரிலே, சுற்று 1 போட்டியில் இந்திய வீரர்கள் 4 வது இடம் பிடித்துள்ளனர். இந்த சுற்றில்,  இந்திய வீரர்கள் முகமது அனஸ்,நிர்மல்,அமோஜ் மற்றும் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜ் ஆகிய 4 பேர் கலந்துகொண்டனர். இந்த குழுவினர், 4வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளனர். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்திய அணி ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

இருப்பினும், இந்திய அணி 3:00.25 என்ற கணக்கில் ஓடி ஒலிம்பிக்கில் புதிய ஆசிய சாதனையை படைத்துள்ளது.