சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா.
இதனை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.
இதில் பிரபுதேவாவுக்கு நாயகிகளாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.