நடிகர் விஜயின் 47வது பிறந்த நாளையொட்டி அவரது தளபதி 65 புதிய திரைப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பீஸ்ட் எனப் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
பீஸ்ட் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மலையாளத்தின் பிரபல நடிகர் ஷைன் டாம் சாக்கோ இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இதற்காக நேற்று அவர் விமானத்தில் சென்னை வந்தார். நேராக அவர் பீஸ்ட் படப்பிடிப்புக்கு சென்று அதில் கலந்து கொண்டார்.