அஜித் சினிமாவுக்குள் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகிறது. சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆன நிலையில் ரசிகர்கள், வெறுப்பாளர், நடுநிலையாளர்களுக்கு அன்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் அஜித் குமார்.
அஜித் வெளியிட்ட வாழ்த்து செய்தியும் சமூக வலைதளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. நாணயத்தின் மூன்று பக்கங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற வார்த்தைப் பயன்பாடும், ஆங்கிலத்தில் There are two sides of coin என்ற வாக்கியப் பயன்பாடும் பொதுவான புழக்கத்தில் இருந்துவருகிறது. அதனால் கேலி செய்யும் வகையில், நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பது கூட அஜித்துக்கு தெரியவில்லை என்று சிலர் கூறி செய்கின்றனர்.
ஆனால் உண்மையில் ஆங்கிலத்தில் There are three sides of coin என்ற வாக்கியப் பயன்பாடும் புழக்கத்தில் இருக்கிறது. நாணயத்தின் மூன்று பக்கங்கள் என்ற கருத்தாக்கத்தின் படி, தலை, பூ, விளிம்பு(head, tails, edge) என்று வரையறுக்கப்படுகிறது.
நல்லது-கெட்டது, மகிழ்ச்சி-சோகம் என்பதற்கு மத்தியில் ஒரு நிலை உள்ளது. நல்லவர், கெட்டவர் என்பதைக் கடந்து எல்லாருக்கும் வேறு பகுதி இருக்கும் என்பதை ஆங்கிலத்தில் grey area என்ற சொல்லால் வரையறுப்பார்கள்.
Mr Ajith Kumar's message on his 30th year in the film industry
Fans, Haters & Neutrals are 3 sides of the same coin. I graciously accept the Love from fans, the hate from the haters & the unbaised views of the Neutrals.
Live & Let live!
Unconditional Love Always!!
Ajith Kumar— Suresh Chandra (@SureshChandraa) August 5, 2021