மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,126 மற்றும் கேரளா மாநிலத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,27,194 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 195 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,33,410 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 6,799 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 61,17,560 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,810 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 22,414 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,71,563 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 108 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,212 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 19,478 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 34,71,563 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,76,049 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.