சென்னை: சென்னையில் நேற்று 181பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 5,37,732 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 25,55,664 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 34,023 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25,00,434 ஆக அதிகரித்துள்ளது.. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 21,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தலைநகர் சென்னையில், நேற்று 181 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இதுவரை பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 5,37,732 ஆக உயர்ந்துள்ளது. 151 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,79,08 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8316 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 1508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
29.07.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 31,09,098 பேருக்கும், 29.07.2021 அன்று 33,806 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: