டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27சதவிகித இடஒதுக்கீடு சமூக நீதியின் மைல்கல் என பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டு உள்ளார்.
நீட் தேர்வு மூலம் மருத்துவப்படிக்க தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களின்க அகில இந்திய கோட்டாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் வழங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு அகில இந்திய கோட்டாவில், நடப்பாண்டு முதல் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க உத்தர ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்தியஅரசின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 5,550 மாணவர்கள் பயனடைவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுபோல, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த முடிவானது நாட்டின் சமூக நீதியின் புதிய மைல்கல்லாக திகழும் என புகழாரம் சூட்டியுள்ளார்.