டில்லி

ந்தியாவில் நேற்று 42,966 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,14,83,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,966 அதிகரித்து மொத்தம் 3,14,83,458 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 641 அதிகரித்து மொத்தம் 4,22,055 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 41,491பேர் குணமாகி  இதுவரை 3,06,55,435 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,92,500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,258 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,76,057 ஆகி உள்ளது  நேற்று 254 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,31,859 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,645 பேர் குணமடைந்து மொத்தம் 60,58,751 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 82,082 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 22,129 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,05,245 ஆகி உள்ளது.  இதில் நேற்று 156 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,327 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,415 பேர் குணமடைந்து மொத்தம் 31,43,043 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,45,367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,501 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,97,664 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,437 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,767 பேர் குணமடைந்து மொத்தம் 28,38,595 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,767 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,52,040 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,966 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,312 பேர் குணமடைந்து மொத்தம் 24,95,895 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,188 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,540 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,57,932 ஆகி உள்ளது.  நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,292 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,304 பேர் குணமடைந்து மொத்தம் 19,23,675 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,965 பேர் சிகிச்சையில் உள்ளனர்.