சென்னை: தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் சுப.வீ எனப்படும் சுப.வீரபாண்டியன், இவர் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளuக இருந்து வருகிறார். எழுத்தாளரான சுப.வீரபாண்டியன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்து பேசுவதில் திமுகவின் முன்னணி தலைவர்களை மிஞ்சுபவர். அவருக்கு அரசு பதவி வழங்கி கவுரவித்துஉள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தலைவராக பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், திமுகவின் பிரசார பீரங்கியான திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
சுபவீ என்று அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பிரபல சினிமா பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]