பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

கர்நாடக பாஜக அரசில் முதல்வராகப் பதவி வகித்து வரும் எடியூரப்பா விரைவில் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்தன. இதையொட்டி கர்நாக மாநிலத்தில் உள்ள லிங்காயத்து மடாதிபதிகள் மாநாட்டில் எடியூரப்பா பதவி விலகக் கூடாது என தீர்மானம் இயற்றப்பட்டது.
நேற்று எடியூரப்பா செய்தியாளர்களிடம் பாஜக தலைமையின் முடிவுக்காக தாம் காத்திருப்பதாகவும் அநேகமாகத் திங்கட்கிழமை (இன்று) தான் தமது கடைசி பணி தினமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலயில் இன்று தமது முதல்வர் பதவியில் இருந்து தாம் ராஜினாமா செய்வதாக எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும் இன்று பிற்பகல் அவர் கர்நாடக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]