தானும், தன் குடும்பத்தினரும் வறுமையில் வாடுவதாக கூறி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளப்ஹவுஸ் செயலி மூலம் பணம் பறிக்கும் செயலில் பிரபல நடிகரின் உதவியாளர் என்று கூறி ஒருவர் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாராதிராஜாவிடம் ஒருவர் உதவியாளராக சேர முயற்சித்துள்ளார். ஆனால் அவரின் நடவடிக்கை மீது மனோஜ் பாரதிராஜாவிற்கு நம்பிக்கை வராததால் அவரை தொடர்ந்து புறக்கணித்துள்ளார். அவரும் விடுவதாக இல்லை . மனோஜ் அவர்களை பின்தொடர்ந்து அவரிடம் தான் வறுமையில் வாடுவதாகவும் , தன் தாய் உடல்நலக்குறைவுள்ளதாகவும் பல கட்டு கதைகளை அவிழ்த்துள்ளார். தொடர்ந்து அந்த நபர் இப்படி கூறியதால், மனோஜ் பாரதிராஜா அவரை சேர்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட கிளப்ஹவுஸ் செயலியில் தனி அறை ஒன்றை உருவாக்கி, தான் தொடர்ந்து கஷ்டத்தில் இருப்பதாகவும், தனக்கு உடனடியாக 30 ஆயிரம் தேவை என்றும் கூறியதோடு, பணம் கிடைக்காவிட்டால் தங்கள் குடும்பத்தினர் நடுத்தெருவுக்கு தான் வரவேண்டும் என்றும் கூறி சுமார் 49 பேரிடம் அந்த நபர் பணம் கேட்டிருக்கிறார். அந்த நபர் கூறுவது முழுவதும் உண்மை என்று நம்பி அவருக்கு சிலர் உதவியுள்ளனர்.

 

அதேபோல தான் தற்கொலை முயற்சி செய்துக்கொண்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தனது தாயாருக்கு அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என பல காரணங்களை கூறி அந்த நபர் பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் க்ளப் ஹவுசில் 500 Followersகாக வருத்தப்பட்டுமிருக்கார்.

மனோஜ் பாரதிராஜாவிடம் தான் சேர போவதாக கூறி அந்த நபர் இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதை பற்றி பேசிய பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி, இதன் மூலம் எல்லோரும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும், யாரும் தெரியாத நபர்களுக்கு உதவுகிறேன் என்று ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.