சென்னை:
கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது.
அந்த வகையில், ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி ஆட்சி அமைத்த முதல்நாளிலேயே முதல்வர் ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதி உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் தவணையாக கடந்த மாதம் ரூ.2000 வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.