டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் , உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட இந்தியாவில், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள்த் தலைவர்கள், ராகுல்காந்தி, ஊடகத்துறையினர் என ஏராளமானோரின்செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. சர்வதேச அளவில் தி நியூயார்க் டைம்ஸ், கார்டியன், லீ மாண்டே ஆகிய நாளேடுகள் இதை அம்பலப்படுத்தி உள்ளன.
இதில் மோடி அரசின் பங்கு உள்ளதாகவும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம்த தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 நாட்களாக முடங்கி உள்ளது. இன்றும் இந்த பிரச்சினை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளறால் எழுப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியில் ஈடுபட்டதால் அவை முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.