சென்னை
சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதி மீறலுக்காக ரூ.73,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா தாக்குதல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எனவே தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இதைத் தடுக்க காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக் குழு தொடர்ந்து சோதனை நடத்தி வணிக வளாகங்கள் மற்றும் தனியாரிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் சோதனை நடத்தி ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.10,400, அம்பத்தூர் மண்டலத்தில் ரூ.9 ஆயிரம், வளசரவாக்கம் மண்டலம் ரூ.8,200, திருவொற்றியூர் மண்டலம் ரூ.7,500, மணலி மண்டலம் ரூ.1,100, மாதவரம் மண்டலம் ரூ.3,300, தண்டையார்பேட்டை மண்டலம் ரூ.3,600, ராயபுரம் மண்டலம் ரூ.1000, திரு.வி.நகர் மண்டலம் ரூ.3,400, அண்ணாநகர் மண்டலம் ரூ.6,000, தேனாம்பேட்டை மண்டலம் ரூ.5,300, ஆலந்தூர் மண்டலம் ரூ.5,300, அடையாறு மண்டலம் ரூ.1,200, பெருங்குடி மண்டலம் ரூ.4,400, சோழிங்கநல்லூர் மண்டலம் ரூ.3,600 என ரூ.73,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.