சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்பு உள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நாளை மறு நாள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 24, 25 ஆகிய 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் குமரியில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்
‘ வடமேற்கு வங்கக் கடலில் வருகிற 23-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால், தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம், அரபிக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.