பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயத்தை வணிக ரீதியாக முதல் முறை இத்தாலியைச் சேர்ந்த ஒருவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற இருதய மாற்று அறுவை சிகிச்சையில் கார்மட் நிறுவனம் தயாரித்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.
இதன் மூலம் செயற்கை இருதயம் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் வர்த்தக ரீதியாக நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் செலவானதாகவும், அதற்கான செலவை அந்த மாகாண மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.