புதுடெல்லி:
ச்சநீதிமன்ற நடவடிக்கைகள் விரைவில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று தலைமை நீதிபதி என் வி ரமணா தெரிவித்துள்ளார்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்யும் நடைமுறை காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த அறிமுக நிகழ்வில் பங்கேற்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, சில நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வது குறித்து உச்சநீதிமன்றம் யோசித்து வருகிறது” என்று கூறினார்.

இதில் பேசிய அவர், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து, மக்கள் ஊடகங்கள் மூலம் தகவல்களைப் பெறுகின்றனர். இதன் விளைவாக, நீதிமன்றங்களிலிருந்து வரும் தகவல்கள் பரிமாற்ற முகவர்களால் வடிகட்டப்படுகின்றன. இதனால் சில சமயங்களில் பரிமாற்ற இழப்பு ஏற்படுகிறது, நீதிமன்ற நவடிக்கைகளில் கேட்கப்பட்ட கேள்விகளை தவறாகப் புரிந்துகொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், நேரடி அணுகல் இல்லாமைதான் தவறான கருத்துக்களுக்கு இடமளிக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடியாக ஒளிபரப்பு செய்வது தான், மேற்கூறிய பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும். இதுபோன்ற நேரடி அணுகல் மூலம், மக்கள் முழு நடவடிக்கைகளையும், நீதிபதிகளின் கருத்துகளையும் பற்றிய முதல் தகவல்களைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

ஒரு நீதிபதியை மக்கள் கருத்துக்களால் திசைதிருப்ப முடியாது. அவர் பல விவாதங்களுக்கு உட்படுத்தப்படலாம், அது பலரின் வலிமைக்கு எதிராக ஒருவரின் உரிமையைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து அவரை ஒருபோதும் தடுக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

இந்த விழாவில் குஜராத்தைச் சேர்ந்த நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி எம் ஆர் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி டி ஒய் சந்திரசூட், நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கிறது என்றார்.

அரசியலமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது.