டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விலையில், 65.5 கோடி டோஸ் அளவில் இரு தடுப்பூசிகளும் கொள்முதல் செய்ய மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் முயற்சியிலும் மத்தியஅரசு ஈடுபட்டு உள்ளது.
இதற்கிடையில் தடுப்பூசி கொள்முதலில் மாறுப்பட்ட விலை பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றம் மத்தியஅரசை கடுமையாக சாடியது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேவையான தடுப்பூசிகளை மத்தியஅரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அனுப்பி இலவசமாக அனுப்பி வருகிறது. தற்போதைய நிலையில், ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 + ஜிஎஸ்டி ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ.215 + ஜிஎஸ்டி ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகளை புதிய விலையில் பெற மததிய அரசு இரு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்குள், டிசம்பர் கோவிஷீல்டு 37 கோடி டோஸ் தடுப்பூசியும், கோவாக்சின் 28.5 கோடியும், ஆக மொத்தம் 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது.