மும்பை:
தன்னை காண 1,200 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த ரசிகருக்குச் செருப்பு வாங்கி கொடுத்து நடிகர் நடிகர் சோனு சூட் வழியனுப்பிய வைத்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.
சோனு சூட்டின் நல உதவிகளைத் திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் அவரை பஞ்சாபின் அடையாளம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துக் கவுரவித்தது.
தான் செய்த உதவிகளுக்குத் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் சோனு சூட்டுக்கு, இந்தச் செய்தியால் சமூக வலைத்தளங்களில் இன்னும் புகழ் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சோனு சூட் செய்து வரும் உதவிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக, அவரது ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டுக்கு வந்து நன்றி தெரிவித்தார். இதையறிந்த நடிகர் சோனு சூட் ரசிகரை கைகூப்பி வரநேற்று, நன்றியை ஏற்று கொண்டதுடன். அந்த ரசிகருக்கு புதிதாக செருப்பு வாங்க்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்.