பெங்களுரூ:
விதான் சவுதாவுக்குள் டிவி கேமராக்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளதாகக்  கர்நாடக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை  தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விதான சவுதாவில் இருந்து டிவி  கேமராக்களுக்கு  தடை செய்வதற்கான அறிக்கையில் முதல்வர் எடியூரப்பா கையெழுத்திட்டுள்ளார். என்றும், முதலமைச்சருக்கும் பிற அமைச்சர்களுக்கும் கங்கல் ஹனுமந்தையா நுழைவாயிலுக்கு அருகே செய்தி அறிக்கைகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளையும், சந்திப்பு அறைகள் அல்லது அமைச்சர்களின் அறைகளில் ஊடக நபர்களுக்கான செய்தியாளர்கள் பேட்டிகளை  ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்களுக்கு டிபிஏஆர் அறிவுறுத்தியுள்ளது.
விதான சவுதா வளாகத்தில் செய்தியாளர்களுக்குக்  கட்டுப்பாடு விதிக்க  கர்நாடக அரசு முயல்வது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும், காங்கிரஸ்-ஜே.டி-எஸ் கூட்டணி அரசாங்கமும் விதான் சவிதாவிற்குள் பத்திரிகையாளர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த முயன்றது என்பது குறிப்பிடத்தக்கது.