கோலாகாட்:
கோலாகாட் பகுதியில் சிறுவனை கொன்ற வழக்கில் யானையும், அதன் குட்டி யானையும் சிறை வைக்கப்பட்டது.


கடந்த 8ம் தேதி, அசாம் மாநிலம் கோலாகாட் அடுத்த போகாக்காட் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை, துலுமோனி என்ற யானை கொன்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அசாம் போலீசார் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 304 ஏ வழக்கு பதிவு செய்தனர். பின்னர், குற்றம்சாட்டப்பட்ட யானையையும், அதன் குட்டி யானையையும் காவல் நிலையத்தற்கு அழைத்து வந்து கட்டிப் போட்டனர்.

விசாரணை முடிந்த பின்னர், காசிரங்கா தேசிய பூங்காவிற்கு அந்த யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுவனை கொன்ற வழக்கில் யானை மற்றும் அதன் குட்டியை தடுப்புக் காவலில் வைத்தோம். பின்னர், இரு யானைகளையும் வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்’ என்றனர்.