
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இதனை கமல் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தை ஏ.ஆர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன், இசையமைப்பாளராக ராதன் மற்றும் எடிட்டராக பிரசன்னா ஜி.கே உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.
இதில் அபி ஹாசன், மணிகண்டன், ப்ரவீன் ராஜா, ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், அனுபமா குமார், பானுப்ரியா, இளவரசு உள்ளிட்டோர் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
[youtube-feed feed=1]AR Entertainment தயாரிப்பில்,Trident Arts வழங்கும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். @AREntertainoffl @tridentartsoffl #SilaNerangalilSilaManidhargal pic.twitter.com/udgrGHzVaT
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2021