டெல்லி: மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழ்நாடு அனைத்துக்கட்சி குழுவினருடன் சந்தித்து பேசிய பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
செய்தியளார்களை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது,
தமிழ்நாடு அனைத்துகட்சிக் தூதுக்குழு இன்று யூனியன் நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து பேசியது. இந்த சந்திப்பானது சுமார் சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்றது. அப்போது, மத்திய அமைச்சரிடம், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை வலுவாக முன்வைத்தோம். மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடகாவுக்கு உதவ வேண்டாம் என்று மையத்தை வலியுறுத்தினோம். அது தொடர்பான விரிவான டிபிஆர் (விரிவான திட்ட அறிக்கை) அறிக்கை கொடுத்துள்ளோம். மேலும், அதனால் ஏற்படும் சிக்கலையும் எடுத்துக் கூறியுள்ளோம் என்றார்.
மேலும், காவரியின் குறுக்கே அணை கட்ட தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், மேகதாது அணை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணைபோக கூடாது என வலியுறுத்தினோம் என்றவர், தங்களிடம் மத்திய அமைச்சர், மேகதாது அணை கட்ட காவிரி பாயும் மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறியதுடன், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஷெகாவத் உறுதி அளித்தார் என்ற தெரிவித்தார்.