சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை கலந்துரையாடல் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் (ஜூலை) தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு)( 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 26 வீரர் மற்றும் வீராங்கனை பட்டியலை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்து உள்ளது. அதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இதையடுத்து, தமிழக வீரர்களான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் ஆரோக்கியராஜ்,நாகநாதன் பாண்டி, மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலப்பு பிரிவில் பங்கேற்கும் சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், மற்றும் ரேவதி வீரமணி ஆகிய 5 பேருக்கும், தமிழ்நாடு அரசு தலா 5 லட்சம் ரூபாய் ‘ ஊக்கத்தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்சத நிலையில், டோக்கியோ பயணமாக உள்ள தமிழ்நாட்டு வீரர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொளி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வீரர்களான தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், ரேவதி வீரமணி, நாகநாதன் பாண்டி ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.