ண்டிகுவா

ந்தியாவில் இருந்து தப்பி ஓடிய வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகாவில் ஜாமீன் பெற்று ஆண்டிகுவா திரும்பி உள்ளார்.

பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி தனது உறவினரான நிரவ் மோடியுடன் சேர்ந்து வங்கியில் ரூ.13,500 கோடி வரை மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்தது.   தண்டனைக்குப் பயந்து மெகுல் சோக்சி இந்தியாவை விட்டு ஆண்டிகுவாவுக்கு தப்பி ஓடினார்.  அங்குக் குடியுரிமை பெற்று வாழும் மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டிகுவா நாட்டில் இருந்து டொமினிகா நாட்டுக்கு மெகுல் சோக்சி தப்பிச் சென்றதாகத் தகவல்கள் வந்தன.   அங்குக் கைது செய்யப்பட்ட மெகுல் சோக்சி தம்மை இந்தியப் புலனாய்வு அமைப்பினர் கடத்தியதாக புகார் தெரிவித்தார்.  மேலும்  தமக்கு நரம்பியல் சிகிச்சை தேவைப்படுவதாக ஆவணங்கள் அளித்து டொமினிக்கா உயர்நீதிமன்றத்தில் மெகுல் ஜாமின் பெற்றார்.

அதையொட்டி நேற்று மெகுல் சோக்சி தனி விமானத்தில் ஆண்டிகுவாவுக்கு திரும்பி உள்ளார். மெகுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால், “எனது கட்சிக்காரர் மெகுல் சோக்சி பாதுகாப்பாக ஆண்டிகுவா திரும்பி உள்ளார்.  அவருக்கு இங்கு வரும் போது எவ்வித பிரச்சினையும் ஈடுபடவில்லை.  தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார்.

இதனால் மெகுல் சோக்சியின் குடும்பத்தினர் மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.  இந்திய அமைப்பினர் அவரை கடத்தி கடுமையாகச் சித்திரவதை செய்துள்ளனர்.  இதனால் அவர் மனதளவிலும் உடலளவிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.  நாங்கள் டொமினிகாவில் கிடைத்த சட்ட வெற்றியை ஆண்டிகுவாவிலும் பெறத் தயாராகி வருகிறோம்”எனத் தெரிவித்துள்ளார்.