டில்லி: டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று, மத்திய சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார்
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை சந்தித்தபோது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தமிழகத்திற்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தார்.
இதனை தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசிய மா.சுப்ரமணியன், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அதில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது, மேலும் இந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அமைச்சரிடம் நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரினோம். மேலும் பாடப்பிரிவு வித்தியாசம், ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகளை மத்திய அமைச்சரிடன் விளக்கினோம். தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி டோஸ் தேவை என்பதால் கூடுதலாக ஒதுக்கக் கோரினோம். அதுகுறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார். மேலும், தமிழகத்திற்கன தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதாகவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும், கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை சரிசெய்ய 800 கோடி ரூபாய் நிதியை விடுவிப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.1,500 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடுகளை அளித்த பின் மீதமுள்ள தொகையை விடுவிப்பதாக கூறியிருப்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதுபோல மத்தியகல்வி அமைச்சரை சந்தித்தது குறித்தும் கூறினார். அப்போது, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்துவிலக்கு அளிப்பது குறித்து பேசியதாகவும், இந்தாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும என வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.