சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பெருந்தலைர் பிற்நதநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து, அரசு விழாவாக கொண்டாடி வருகின்றன.
சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜரின் உருவச் சில்லைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில், டி.ஆர்.பாலு எம்.பி, தயாநிதி மாறன் எம்.பி, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் இதில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தி.நகரில் உள்ள காமராஜர் வசித்த இல்லத்திலும், தமிழக அரசு சார்பாக அவரது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சென்னை தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விருதுநகரில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் டஹ்ங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரு மரியாதை செலுத்தினர்
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல தலைவர்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த கர்மவீரர் பிறந்தநாள் இன்று! ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை கிட்டிடச் செய்த பெருந்தலைவர்! அவர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உத்தரவிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் வழியில் கழக அரசு என்றென்றும் காமராஜரின் நினைவைப் போற்றும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,
மனித குலத்துக்கும், நாட்டிற்கும் அருந்தொண்டாற்றி இந்திய மக்களின், குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவரும், இளம் வயதிலிருந்தே நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும், தொண்டு என்பதற்கு ஓர் உதாரணமாக விளங்கியவரும், கொடி பிடிக்கும் அடிப்படைத் தொண்டனாய் இருந்து தன்னலமற்ற தன் உழைப்பினால் கொடி கட்டி ஆளும் முதலமைச்சராக ஆனவரும், “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை உருவாக்கியவருமான, கர்மவீரர் காமராசரின் பிறந்த நாளான இன்று அவருக்கு என் மரியாதையினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமமுக கட்சித்தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டில்,
தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவர்களது பிறந்த நாளில் வணங்குகிறேன். தமிழகம் தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.