போபால்: மத்திய பிரதேசத்தில் 25ந்தேதி முதல் 50 சதவிகித மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் சிவராஜ் சிங்  சவுகான் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 16ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் விரைவில், பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் தநிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூலை 25-ம் தேதி முதல் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்,  கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதையடுத்து, முதல்கட்டகமா ‘  11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 25-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து 50 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.