சென்னை: ‘நீட் தேர்வு தேதியை மத்தியஅரசு அறிவித்துள்ள உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு மதிப்பெண் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றின் 2வது அலையின் கடுமையான தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதுபோல, தமிழகத்திலும் பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன், மதிப்பெண்கள் மத்தியஅரசு வழிகாட்டுதல்படி, மாணவர்களின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரியாக 50 மதிப்பெண்களும், 11-ம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 20 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டின் அடிப்படையில் 30 மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பள்ளிகள் சார்பில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுமதிப்பெண் பட்டியல் தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றை சரி பார்க்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பிளஸ்2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் ஜூலை 31-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார். ஆனால், மத்தியஅரசு நீட் நுழைவு தேர்வுக்கான தேதியை அறிவித்து, உடனே ஆன்லைன் விண்ணப்பத்தையும் அறிவித்து விட்டதால், மாணாக்கர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மதிப்பெண் பட்டியல் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை அல்லது நாளை மறுநாள் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரும் 16ந்தேதி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனைக்கு பிறகு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாகவே வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.